Advertisment

மத்திய அரசின் திட்டங்களால் இந்தியாவின் வளர்ச்சி முன்னேறப் போவதில்லை - ப.சிதம்பரம்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிகவும் வலுவான தலைவலிகளை எதிர்கொள்ளும் நேரத்தில், நீங்கள் தவறான முடிவுகளை எடுக்க கூடாது

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
மத்திய அரசின் திட்டங்களால் இந்தியாவின் வளர்ச்சி முன்னேறப் போவதில்லை - ப.சிதம்பரம்

ஆளும் பாஜக அரசின் பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி நடவடிக்கைகள், இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு உண்மையில் ஆதரவாக இல்லை என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து, ஆஸ்திரேலியா இந்தியா இன்ஸ்டிடியூட்டில் நடந்த 'உலகில் வளர்ந்து வரும் சக்திகள்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா' எனும் தலைப்பில் அவர் உரையாற்றிய போது, "இப்போது இந்தியாவில் நிகழும் சூழல் கொண்டு, பெரியளவிலான நல்ல மாற்றங்களை கொண்டுவர முடியாது. மத்திய அரசின் திட்டங்களில் சில முக்கிய தடைகள் உள்ளன. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தான் இதற்கு காரணம்.

மாட்டிறைச்சி விற்பனை மற்றும் நுகர்வு, கலாச்சார நெறிகள், ஆடை குறியீடுகள், இந்தி மொழி தேசியமயமாக்கல், தேசியவாதம், சீருடை சிவில் குறியீடு மற்றும் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு நிலை நடவடிக்கைகள் போன்றவற்றினால் ஏற்படும் விவாதம் காரணமாக மக்களிடையே அச்ச உணர்வு ஏற்படுகிறது. குறிப்பாக, தலித்துகள், மலைவாழ் மக்கள், சிறுபான்மை சமூகங்கள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் இடையே இந்த அச்ச உணர்வு அதிகமாக உள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி அறிமுகம் போன்றவை மிகப்பெரிய சிக்கலுக்கு காரணமாக அமைந்துள்ளன. கடந்த ஐந்து காலாண்டுகளில், ஜிடிபி வளர்ச்சி விகிதம் ஒவ்வொரு காலாண்டிலும் குறைந்து போனதன் விளைவாக பொருளாதாரத்தில் கடுமையான பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிகவும் வலுவான தலைவலிகளை எதிர்கொள்ளும் நேரத்தில், நீங்கள் தவறான முடிவுகளை எடுக்க கூடாது. ஆரம்பமாகியுள்ள அரசியல் புயல்களின் தாக்கம் தெரிகிறது. பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது.

இளம் சமூகத்தினர், சமூக தளங்கள் மூலம் அநீதிக்கு எதிராக குரல் கொடுத்துவருவது மிகவும் வரவேற்கக்கூடிய விஷயமாகும்.

சமூக குழுக்களில், தலித்துகள் மிகவும் குரல் பெறுகிறார்கள். தேர்தல் நேரத்தில்தான் ஓ.பி.சி.களில் உள்ள புறக்கணிக்கப்பட்ட சாதிகள் அரசாங்கத்திற்கு பாடம் புகட்ட வேண்டும்" என்றார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், "இளைஞர்களின் கோபம் அதிகமாவதன் மூலம் தான் வேலையில்லா திண்டாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்" என்றார்.

முக்கியமான கட்டமைப்பு சீர்திருத்தங்களை முன்னெடுக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் பேசிய போது, பாராளுமன்றம் மற்றும் மாநிலங்களிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட தொழிலாளர் சட்டங்களை சீர்திருத்தம் செய்ய மத்திய அரசு வெட்கப்படுகிறது என்று கூறியதுடன், சீர்திருத்தங்களைச் செய்யத் தயாராக இருந்த சில தொழிற்சங்கங்கள் எதிர்ப்பை சந்தித்தன என்றார்.

நிலையில்லா ஒப்பந்த முறையாலும், ஸ்திரமின்மையாலும் தொழிலாளர்கள் மிகவும் பாதிப்படைகின்றனர். குறிப்பாக, புதிய வரவு தொழிலாளர்களும். நிலம், பண்ணை உற்பத்தி, நிதி ஆகியவற்றிற்கான சந்தையை சீர்திருத்துவதிலும் இதே நிலை தான்.

இருப்பினும், கைலாஷ் சத்யார்த்தி, ராஜேந்திர சிங் போன்றவர்களும், கூஞ், சுலப் சௌசலயா மற்றும் ஆஷா போன்ற நிறுவனங்களும் நாட்டினைத் தாண்டி பல சிறப்பான செயல்களை செய்து வருகின்றனர்.

ஆஸ்திரேலியா உடனான உறவின் வளர்ச்சி குறித்து அவர் கூறுகையில், கடந்த பத்தாண்டுகளில் இருதரப்பு உறவுகள் விரைவாக உயர்ந்துள்ளது என்றார்.

2014 ஆம் ஆண்டில் உள்நாட்டு அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது ஒரு முக்கிய ஒப்பந்தமாகும் என்று கூறிய சிதம்பரம், "விவாதத்தின் கீழ் இருக்கும் விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம், இன்னொரு மைல்கல்லாகஇருக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்" என்றார்.

"எனது காங்கிரஸ் கட்சி, இரு நாடுகளின் நெருங்கிய பொருளாதார உறவிற்கு மிகப்பெரிய அளவு ஒத்துழைப்பு கொடுத்தது" என்று தெரிவித்தார்.

Gst
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment