Advertisment

X தளத்தில் இந்த வசதியுமா? கூகுள் மீட்டிற்கு போட்டியாக களமிறங்கும் அம்சம்

'கான்ஃபிரன்சஸ்' அம்சம் X ஸ்பேஸின் ஒரு பகுதியாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இது எப்போது அறிமுகம் செய்யப்படும் என தகவல் இல்லை.

author-image
WebDesk
New Update
X.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனரும்,  உலகின் பணக்காரருமான எலான் மஸ்க்  X (டிவிட்டர்  ) தளத்தை வாங்கியதில் இருந்து பல்வேறு அம்சங்களை மாற்றியும், புதிதாக அறிமுகம் செய்தும் வருகிறார். அந்த வகையில் தற்போது கூகுள் மீட் போன்று 'கான்ஃபிரன்சஸ்'  (Conferences) என்ற ஆன்லைனின் மீட்டிங் வசதியை X  தளத்தில் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. கூகுள் மீட் போன்று ஆடியோ, வீடியோ கால் மீட்டிங் வசதியாக இதுவும் இருக்கும் எனக் கூறப்படுகிறது. 

Advertisment

எனினும் இதுகுறித்து முழுமையான விவரங்கள் வெளியாகவில்லை.  X தற்போது பொது தளமாக உள்ளது. X ஸ்பேஸில் யார் வேண்டுமானாலும் இணைந்து கேட்கலாம். ஆனால்   ‘வெப் கான்ஃபரன்ஸ்’ அம்சத்தில் குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டும்  குரூப் காலில் என்டர் செய்யும் வகையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  எலான் மஸ்க் X தளத்தை 'X - the everything app' ஆக மாற்றும் வகையில் இந்த அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறார். 'கான்ஃபிரன்சஸ்' அம்சமும் அவரின் திட்டத்தில் ஒரு பகுதியாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment