Advertisment

திருவெறும்பூர் சாலை விபத்து: 2 பெண்கள் பலி: 2 இளைஞர்கள் படுகாயம்

திருவெறும்பூர் அருகே துவாக்குடியில் நடந்த சாலை விபத்தில் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்த நிலையில் இரண்டு இளைஞர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

author-image
WebDesk
New Update
Thiruverumpur road accident 2 women killed and 3 youth seriously injured Tamil News

திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடி அரசு மருத்துவமனை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அரசு பேருந்தின் பின்புறமாக மோதியது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

க.சண்முகவடிவேல்

Advertisment

Road Accident: சேலம் அஸ்தம்பட்டியை சேர்ந்தவர் கபிலன் (50). இவரும் பாண்டிச்சேரி அரியாங்குப்பம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த அவனீஷ் ( 49 ) மற்றும் 30 மற்றும் 35 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்களுடன் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் காரில் தஞ்சை பெரிய கோயிலுக்கு சென்றுள்ளனர். அவர்கள் வந்த கார் திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடி அரசு மருத்துவமனை அருகே வந்தது. 

துவாக்குடியில் இருந்து கீரனூர் செல்லும் அரசு பேருந்து, பயணிகளை இறக்கிவிட்டு அரசு பணிமனைக்கு செல்வதற்காக முன்னால் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து பேருந்தின் பின்பகுதியில் மோதியது. இதில் காரின் முன் பகுதி அரசு பேருந்தில் பின்பகுதியில் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. 

இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே இரண்டு பெண்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த பெண்களின் பெயர் ஊர் விலாசம் எதுவும் தெரியவில்லை. இந்த நிலையில் காரை ஓட்டி வந்த கபிலனும் அவருடன் வந்த அபனீஷ் சுயநினைவு இல்லாமல் இருந்தவர்களை துவாக்குடி போலீசார் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்து போன பெண்கள் யார் எந்த ஊரை சேர்ந்தவர்கள் கபிலன் மற்றும் அவனீஷ்க்கு உறவினர்களா என போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்

விபத்தில் படுகாயம் அடைந்த கபிலன் மற்றும் அவனிஷ் உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் சுயநினைவு இழந்து உள்ள கபிலன் மற்றும் அவனிஷ் சுய நினைவிற்கு வந்த பிறகோ அல்லது அவர்களின் உறவினர்கள் வந்து இறந்தவர்கள் யார் என கூறினால்தான் அடையாளம் தெரியும் அதுவரை யார் என்பது தெரியவில்லை என போலீசார் கூறுகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Road Accident
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment