Advertisment

Tamil News Highlights: பிரபல நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் மரணம்

Tamil News Live Updates- 29 March 2024-இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Daniel Ba.jpg

Tamil News Live Updates

Tamil News Live Updates : பெட்ரோல், டீசல் விலை

Advertisment

சென்னையில் 13-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75 காசுகளாகவும், டீசல் லிட்டர் ரூ.92.34 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

 கேளிக்கை விடுதி விபத்து: மெட்ரோ நிர்வாகம் விளக்கம்

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்த விவகாரம் - மெட்ரோ ரயில் பணிகளின் அதிர்வால் இடிந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

  • Mar 29, 2024 23:36 IST
    நல்ல வல்லரசை உருவாக்க வேண்டும், அதனால் தான் இந்த முடிவு : நடிகர் சரத்குமார்

    விருதுநகர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ராதிகா சரத்குமாரை ஆதரித்து, மதுரை மாவட்டம் திருநகரில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய சரத்குமார், "எனக்கு மட்டும் ஆசைகள் இருக்காதா? நல்ல வல்லரசை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் வந்த உடனேயே கட்சியை பாஜகவில் இணைக்க வேண்டும் எனத் தோன்றியது" என கூறியுள்ளார்.



  • Mar 29, 2024 21:33 IST
    வாக்குகளைப் பெற பணத்தின் மீது நாங்கள் நம்பிக்கை வைப்பதில்லை : அண்ணாமலை

    ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு பணம் கொடுத்தேனா? - அண்ணாமலை விளக்கம்

    ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு பணம் கொடுத்ததாக வீடியோ பரவிய விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள அண்ணாமலை "என் மண் - என் மக்கள்" யாத்திரையின் போது எடுக்கப்பட்ட வீடியோ. ஆரத்தி எடுப்பவர்களுக்கு பாசத்தின் அடையாளமாக வெகுமதி அளிப்பது நமது கலாச்சாரம். வாக்குகளைப் பெற பணத்தின் மீது நாங்கள் நம்பிக்கை வைப்பதில்லை.  தேர்தல் நேரத்தில் இதை கடைப்பிடிப்பதில்லை என்றும் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.



  • Mar 29, 2024 20:26 IST
    அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக பாமக வேட்பாளர் செளமியா அன்புமணி மீது வழக்கு

    தருமபுரி தொகுதி பாமக வேட்பாளர் செளமியா அன்புமணி உள்ளிட்ட 11 பாமகவினர் மீது வழக்குப்பதிவு அனுமதியின்றி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடத்தியதாக மேச்சேரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு



  • Mar 29, 2024 20:13 IST
    மதுராந்தகத்தில் எடப்பாடி பழனிசாமி பரப்புரை


    மக்களவை தேர்தலை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மதுராந்தகத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.



  • Mar 29, 2024 19:28 IST
    வருமான வரித்துறை நோட்டீஸ்; காங்கிரஸ் நாளை ஆர்ப்பாட்டம்

     

    வருமான வரித்துறை நோட்டீஸ்க்கு எதிராக நாடு முழுவதும் நாளை (மார்ச் 30, 2024) போராட்டம் நடத்த அகில இந்திய காங்கிரஸ் தலைமை அழைப்பு விடுத்துள்ளது.
    வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியதற்கு எதிராகவும், காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.135 கோடி வலுக்கட்டாயமாக வருமான வரித்துறை பிடித்தம் செய்ததற்கு எதிராகவும், காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை முடக்கியதற்கு எதிராகவும் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.



  • Mar 29, 2024 18:44 IST
    தமிழ்நாட்டில் எங்குப் பார்த்தாலும் ஊழல் நிலவுகிறது; பிரதமர் நரேந்திர மோடி

     

    தமிழ்நாட்டில் எங்குப் பார்த்தாலும் சட்டம் ஒழுங்கு பிரச்னை, ஊழல் நிலவுவது கவலை அளிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
    மேலும், “தமிழ்மொழி எனக்கு தாய்மொழியாக இல்லாதது வருத்தம் அளிக்கிறது” எனவும் தெரிவித்துள்ளார்.



  • Mar 29, 2024 18:21 IST
    ஆரத்திக்கு பணம் கொடுத்தாரா அண்ணாமலை; விசாரணைக்கு உத்தரவு

    அண்ணாமலை ஆரத்திக்கு பணம் கொடுத்ததாக வெளியான வீடியோ விவகாரத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.



  • Mar 29, 2024 18:11 IST
    பிரதமர் பேரணியில் பள்ளிக் குழந்தைகள்; சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

     

    “கோவையில் நடந்த பிரதமர் நரேந்திர மோடியின் வாகனப் பேரணியில் பள்ளிக்குழந்தைகள் சீருடையில் கலந்துகொண்ட விவகாரத்தில், ஏப்ரல் 3ம் தேதிக்குள் கோவை சாய்பாபா காலனி காவல்நிலையம் பதிலளிக்க வேண்டும்” என நீதிமன்றம் கூறியுள்ளது.



  • Mar 29, 2024 17:33 IST
    ஏப்.12 பிறை தெரிந்தால் பொதுத்தேர்வு ரத்து; அன்பில் மகேஷ்

     

    “வரும் ஏப். 12ம் தேதி பிறை தென்பட்டு ரமலான் பண்டிகை வரும் பட்சத்தில் அன்றைய தேதியில் தமிழ்நாட்டில் நிச்சயமாக பொதுத்தேர்வு இருக்காது” என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.



  • Mar 29, 2024 17:10 IST
    ரூ.11 கோடி வருமான பாக்கி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நோட்டீஸ்

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில், “நிலுவையில் உள்ள வருமான வரி ரூ.11 கோடியை செலுத்த வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.
    ஏற்கனவே நிலுவையில் உள்ள வருமான வரிபாக்கி ரூ.1700 கோடியை திருப்பி செலுத்தக் கோரி காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.



  • Mar 29, 2024 16:59 IST
    "சாதனைகளை சொல்லி வாக்கு சேகரியுங்கள்" - ராஜேந்திர பாலாஜி பதில்

    "புகைப்படத்தையும், செங்கல்லையும் காண்பித்து வாக்கு சேகரிப்பது தவறு. சாதனைகளை சொல்லி வாக்கு சேகரியுங்கள்" என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பதிலளித்துள்ளார். 



  • Mar 29, 2024 16:58 IST
    கோவை தலைமை ஆசிரியை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு

    கோவையில் பிரதமரின் பேரணிக்கு பள்ளிக் குழந்தைகளை அழைத்துச் சென்றதாக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, தனியார் பள்ளி தலைமை ஆசிரியை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். 

    இந்த மனு மீது ஏப்.3ம் தேதிக்குள் பதிலளிக்க, சாய்பாபா காலனி காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றும் காவல்துறைக்கு நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் அறிவுரை வழங்கியிருந்தார்.



  • Mar 29, 2024 16:57 IST
    11 கோடி ரூபாய் வரி பாக்கி - இந்திய கம்யூ., கட்சிக்கு வருமான வரி நோட்டீஸ்

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 11 கோடி ரூபாய் வரி பாக்கியை செலுத்த வலியுறுத்தி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 



  • Mar 29, 2024 16:04 IST
    ம.தி.மு.க-வின் சின்னம் என்ன? - நாளை அறிவிப்பு: துரை வைகோ தகவல் 

    மக்களவைத் தேர்தலில், மதிமுகவுக்கு வழங்கப்பட்டுள்ள சின்னம் குறித்து நாளை காலை அறிவிக்கப்படும் என தி.மு.க கூட்டணியில் திருச்சி தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ, திருச்சியில் தெரிவித்துள்ளார். 



  • Mar 29, 2024 15:44 IST
    அ.தி.மு.க பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம்

    மக்களவைத் தேர்தலையொட்டி, கூடுதல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமித்துள்ளார் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. தருமபுரி, சென்னை வடக்கு, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், தென்காசி தொகுதிகளுக்கு கூடுதல் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 



  • Mar 29, 2024 15:43 IST
    ரூ.1800 கோடி அபராத நோட்டீஸ் - காங்கிரஸ் கடும் கண்டனம் 

    காங்கிரஸுக்கு சுமார் ரூ.1800 கோடி அளவுக்கு அபராத நோட்டீஸ் அனுப்பியுள்ளது வருமான வரித்துறை. பழைய வருமான வரி விவகாரங்களை மீண்டும் ஆய்வு செய்து அபராதம் கட்ட சொல்வது அப்பட்டமான விதிமீறல் என்றும், ஜனநாயகத்தை தகர்க்கும் வேலைகளை செய்வதில் பா.ஜ.க உச்சகட்டத்தை எட்டி இருப்பதாகவும் காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. 



  • Mar 29, 2024 15:10 IST
    பீகாரில் இந்தியா கூட்டணி தொகுதி உடன்பாடு

    பீகாரில் இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு இறுதியானது. ராஷ்டிரிய ஜனதா தளம் 26 இடங்களிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும், இடதுசாரி கட்சி 5 இடங்களிலும் போட்டியிடுகிறது. 



  • Mar 29, 2024 14:49 IST
    சி-விஜில் செயலி மூலம் 79,000 புகார்கள்

    சி-விஜில் செயலி மூலமாக இதுவரை 79 ஆயிரம் புகார்கள் பெறப்பட்டுள்ளது. 99 சதவீத புகார்கள் முடித்து வைக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தகவல். 89 சதவீத புகார்கள் 100 நிமிடங்களில் முடிக்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் விளக்கம்



  • Mar 29, 2024 14:48 IST
    5 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும்

     தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 1ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும். அடுத்த 5 நாட்களுக்கு அதிகப்பட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்



  • Mar 29, 2024 14:34 IST
    ‘வரி தீவிரவாத’ தாக்குதலை நடத்தும் பா.ஜ.க

    ‘வரி தீவிரவாத’ தாக்குதலை நடத்தும் பா.ஜ.க காங். பகிரங்க குற்றச்சாட்டு

    மக்களவைத் தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ‘வரி தீவிரவாத’ தாக்குதலை பாஜக நடத்துவதாக அக்கட்சி குற்றச்சாட்டு. வங்கிக் கணக்கில் இருந்த ரூ.135 கோடியை ஏற்கனவே வருமான வரித்துறை முடக்கியுள்ள நிலையில் மேலும் ரூ.1823.08 கோடி அபராதம் கட்ட வேண்டும் என காங்கிரஸ் கட்சிக்கு புதிய நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 1993-94, 2016-27, 2017-18, 2018-19 மற்றும் 2019-20 காலகட்டத்திற்கு  வருமான வரித்துறை  நோட்டீஸ் 



  • Mar 29, 2024 13:58 IST
    ரூ.1800 கோடி அபராதம்: காங்கிரஸ் கண்டனம்

    காங்கிரஸுக்கு சுமார் 1800 கோடி ரூபாய் அளவுக்கு அபராத நோட்டீஸ் அனுப்பிய வருமான வரித்துறை

    பழைய வருமான வரி விவகாரங்களை மீண்டும் ஆய்வு செய்து அபராதம் கட்ட சொல்வது அப்பட்டமான விதிமீறல்

    ஜனநாயகத்தை தகர்க்கும் வேலைகளை செய்வதில் பாஜக உச்சகட்டத்தை எட்டி இருப்பதாக காங்கிரஸ் விமர்சனம்



  • Mar 29, 2024 13:57 IST
    தேர்தல் பணிக்கு வராத 1500 பேருக்கு நோட்டீஸ்

    சென்னையில் தேர்தல் பணிக்கு வராத 1,500 அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்

    நாளை மீண்டும் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்துள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தகவல்



  • Mar 29, 2024 13:48 IST
    ரூ.1,823 கோடி செலுத்த காங்-க்கு ஐ.டி நோட்டீஸ்

    1993-94 முதல் 2029-20 கால கட்டத்திற்கான வரி மற்றும் அபராதம் ரூ.1,823 கோடி செலுத்தக் கோரி காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித் துறை நோட்டீஸ். ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்ட நிலையில் தற்போது ஐ.டி நோட்டீஸ்



  • Mar 29, 2024 13:31 IST
    பொன்னேரியில் உதயநிதி பரப்புரை

    “பொய்களின் கூடாரமாக விளங்கும் பாசிச பாஜகவையும் – அவர்களுக்கு எல்லா வகையிலும்  துணை நிற்கும் அடிமைகளையும் வீட்டுக்கு அனுப்ப INDIA கூட்டணியை ஆதரிக்க வேண்டும்” -பொன்னேரியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை 



  • Mar 29, 2024 13:15 IST
    தி.மு.க ஆட்சியால் தமிழ்நாடு சோர்வு: மோடி 

    தமிழ்நாட்டில் உள்ள பா.ஜ.க தொண்டர்கள் கட்சியின் செயல்பாடுகளை பரப்ப திறம்பட செயல்படுகின்றனர். திமுகவின் தவறான ஆட்சியால் தமிழ்நாடு சோர்ந்து போய் இருக்கிறது. தமிழ்நாடு பா.ஜ.க தொண்டர்களுடன் இன்று மாலை கலந்துரையாடுவது குறித்து பிரதமர் மோடி X தளத்தில் பதிவு. 



  • Mar 29, 2024 12:43 IST
    தொகுதி பங்கீடுகள் இறுதி

    பீகார் மாநிலத்தில் I.N.D.I.A கூட்டணி தொகுதி பங்கீடுகள் இறுதியானது;

    ராஷ்டிர ஜனதா தள கட்சி 26 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளிலும், இடதுசாரிகள் 5 தொகுதியிலும் போட்டி



  • Mar 29, 2024 12:41 IST
    கனியாமூர் தனியார் பள்ளி வழக்கு

    கடந்த 2022ம் ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி மரணத்தை தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் குறித்தான விசாரணையில் நிலை பற்றிய அறிக்கையை தாக்கல் செய்ய சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு



  • Mar 29, 2024 12:27 IST
    தமிழச்சி தங்கபாண்டியன் பிரசாரம்

    குஜராத்தில் புயல் அடித்தபோது சென்று பார்த்த பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை பாதிப்பை ஒருமுறையாவது வந்து பார்த்தாரா?

    - வேளச்சேரி பகுதியில் தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் பிரசாரம்



  • Mar 29, 2024 12:20 IST
    மோடி கலந்துரையாடல்

    தமிழ்நாடு பாஜக தொண்டர்களுடன், இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி இணையதளம் வாயிலாக கலந்துரையாடல்



  • Mar 29, 2024 12:13 IST
    உயிரிழந்தவரின் அண்ணன் புகார்

    சென்னையில் உள்ள Sekhmet கேளிக்கை விடுதியில் நடைபெற்ற விபத்தில் சிக்கி உயிரிழந்த தனது தம்பி உயிரிழப்புக்குக் காரணமாக நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஸ்டீபன் என்பவர் அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார்



  • Mar 29, 2024 12:13 IST
    பிரமேலதா விஜயாகாந்த் தேர்தல் பரப்புரை

    தமிழ்நாட்டில் சிறந்த மாநகராட்சி கோவை மாநகராட்சி தான்;  

    புரட்சித் தலைவரின் பெயரினைக் கொண்ட அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மாபெரும் வெற்றி பெறுவார்

    - கோவையில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரனை ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரமேலதா விஜயாகாந்த் தேர்தல் பரப்புரை



  • Mar 29, 2024 11:50 IST
    3 தொழிலாளர்கள் உயிரிழப்பு- டிடிவி தினகரன் வலியுறுத்தல்

    சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியார் மதுபானக் கூட மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு;

    பாதுகாப்பு வசதிகளின்றி இயங்கும் மதுபானக்கூடத்திற்கு அனுமதி வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு கடும் கண்டனம்;

    பொதுமக்களின் உயிரை வணிக நோக்கத்துடன் அணுகாமல் பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் இயங்கிவரக்கூடிய மதுபானக்கூடங்களை கணக்கெடுத்து, உடனடியாக மூட நடவடிக்கை எடுப்பதோடு, 3 தொழிலாளர்கள் உயிரிழப்புக்கு காரணமான ஷேக்மேட் மதுபானக்கூட நிறுவனர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

    - டிடிவி தினகரன் வலியுறுத்தல்



  • Mar 29, 2024 11:50 IST
    மோடி கூறியது தேர்தல் நடத்தை விதிமீறல்

    100 நாள் வேலைத் திட்டத்தில் கூடுதல் சம்பளம் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியது தேர்தல் நடத்தை விதிமீறல்;

    உடனடியாக பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

    - ஈரோடு காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்



  • Mar 29, 2024 11:28 IST
    பாஜக வேட்பாளருக்கு மோடி தொலைபேசி அழைப்பு- தேர்தல் ஆணையத்திடம் டி.எம்.சி. புகார்

    பிரதமர் நரேந்திர மோடி, "லஞ்சம் கொடுத்து, தேவையற்ற செல்வாக்குகளை உருவாக்குவதன் மூலம்" ஊழல் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குற்றம் சாட்டிய திரிணாமுல் காங்கிரஸ் (TMC), பாஜகவின் கிருஷ்ணாநகர் வேட்பாளர் அம்ரிதா ராய்க்கு பிரதமரின் தொலைபேசி அழைப்பு குறித்து தேர்தல் ஆணையத்திடம் வியாழக்கிழமை புகார் அளித்துள்ளது.

    பாஜக வேட்பாளருக்கு மோடி தொலைபேசி அழைப்பு- தேர்தல் ஆணையத்திடம் டி.எம்.சி. புகார்



  • Mar 29, 2024 11:21 IST
    5 முறை தேர்தலில் நின்று தோற்றுப் போனேன்

    தேர்தலில் செலவு செய்ய பணம் இல்லாததால்தான் 5 முறை தேர்தலில் நின்றும் தோற்றுப் போனேன்

    தேர்தலில் நிற்க பணம் இல்லை என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய கருத்தில் எதார்த்தமான உண்மை இருக்கிறது

    - தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் பேச்சு



  • Mar 29, 2024 11:19 IST
    மத்திய அமைச்சர் எல்.முருகன் மீது வழக்குப்பதிவு

    தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக அளிக்கப்பட்ட புகாரில் மத்திய இணை அமைச்சரும், நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் மீது வழக்குப்பதிவு



  • Mar 29, 2024 11:01 IST
    பா.ஜ.க ஆட்சிக்கு வந்தபிறகு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை

    பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை; ஏழை விவசாயிகள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்கிறது .  மக்களவைத் தேர்தலில் நிச்சயமாக பாஜக ஆட்சிக்கு வராது .  திமுக ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.டி சிக்கல்கள், குளறுபடிகள் தீர்க்கப்படும் .  அம்பானிக்கும், அதானிக்குமான ஆட்சி தான் பாஜக ஆட்சி .  பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்ற நிலையை நாம் உருவாக்க வேண்டும்" - கோவையில் திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி பேச்சு



  • Mar 29, 2024 10:39 IST
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு : ஊதியத்துடன் கூடிய விடுமுறை அறிவிப்பு

    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு அன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை - வணிக நிறுவனங்கள், கடைகள், தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கு தொழிலாளர் நலத்துறை உத்தரவு



  • Mar 29, 2024 10:31 IST
    தருமபுரி , கிருஷ்ணகிரி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம்

    திமுக கூட்டணி சார்பில் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம். 



  • Mar 29, 2024 10:13 IST
    விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்தியப்படி பிரசாரம் மேற்கொண்டார் ஆட்சியர் மீனவர்கள்

    விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்தியப்படி பிரசாரம் மேற்கொண்டார் ஆட்சியர் மீனவர்கள், வியாபாரிகளிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு இந்திய கடற்படை, வருவாய்துறை, மீன்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்பு 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி, நாகை ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் வித்தியாசமான பிரசாரம் விசைப்படகில் பயணம் செய்து, மீனவ மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆட்சியர்.



  • Mar 29, 2024 08:46 IST
    நாடாளுமன்ற தேர்தல் 2024: தலைவர்கள் இன்றைய பிரசாரம்

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் - தர்மபுரி, கிருஷ்ணகிரி.  அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர். தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி கோவை, பொள்ளாச்சி. பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் விருத்தாசலம், குள்ளஞ்சாவடி.  தமிழக பா.ஜனதா தலைவர் கே.அண்ணாமலை ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், சென்னை. மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் - ஈரோடு.  அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி. தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு.  இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்.



  • Mar 29, 2024 08:33 IST
    3 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு

    நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு



  • Mar 29, 2024 08:32 IST
    தி.மு.க வேட்பாளர்கள் : உதயநிதி பரப்புரை

    தி.மு.க கூட்டணி சார்பில் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் மற்றும் காஞ்சிபுரம் தி.மு.க வேட்பாளர் செல்வம் ஆகியோரை ஆதரித்து இன்று பரப்புரை செய்கிறார் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.



  • Mar 29, 2024 08:30 IST
    அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் மருத்துவர் சரவணனுக்கான தேர்தல் பணிமனை அலுவலகத்தை திறந்து வைத்தார் இ.பி.எஸ்

    அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் மருத்துவர் சரவணனுக்கான தேர்தல் பணிமனை அலுவலகத்தை திறந்து வைத்தார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. 



  • Mar 29, 2024 08:29 IST
    ஓ.பி.எஸ்.க்கள் போட்டி - இ.பி.எஸ் கருத்து

    ஜனநாயக நாட்டில் தேர்தலில் போட்டியிட அனைவருக்கும் உரிமை உண்டு, ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் தேர்தலில் நிற்கும் 5 பேருமே தகுதியானவர்களே எத்தனை பன்னீர்செல்வம் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம் - மதுரையில் இ.பி.எஸ் பேட்டி



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment