Advertisment

பாகிஸ்தானை புரட்டி எடுத்த 2-ம் தர நியூசி., அணி... தேம்பித் தேம்பி அழுத இளம் ரசிகர்கள் - வீடியோ!

முந்தைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்திடம் அதிர்ச்சி தோல்வி அடைந்த சூழலில், போட்டி நடந்த லாகூர் ஸ்டேடியத்தில் திரண்டிருந்த இளம் ரசிகர்கள் சிலர் தேம்பித் தேம்பி அழுதுள்ளனர்.

author-image
WebDesk
New Update
Video Young Fans Break Down In Tears As New Zealand B Team Embarrass Pakistan Again Tamil News

பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் நியூசிலாந்து அணி 2-1 என்கிற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

New Zealand vs Pakistan: பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து வரும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் டி20 போட்டி மழையால் தடைபட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணியும், மூன்றாவது போட்டியில் நியூசிலாந்து அணியும் வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்திருந்தன.

Advertisment

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை நடந்த 4-வது டி20 போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை நியூசிலாந்து அணி வீழ்த்தியது. இந்த அபார வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி தொடரில் 2-1 என்கிற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது. இவ்விரு அணிகள் மோதும் கடைசி மற்றும் 5-வது போட்டி இன்று நடைபெற உள்ளது. 

தேம்பித் தேம்பி அழுத இளம் ரசிகர்கள்

இந்த நிலையில், முந்தைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்திடம் அதிர்ச்சி தோல்வி அடைந்த சூழலில், போட்டி நடந்த லாகூர் ஸ்டேடியத்தில் திரண்டிருந்த இளம் ரசிகர்கள் சிலர் தேம்பித் தேம்பி அழுதுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. 

பாகிஸ்தானுக்கு எதிராக களமாடி வரும் நியூசிலாந்து அணியில் அவர்களின் முன்னணி வீரர்களான கேன் வில்லியம்சன், ட்ரெண்ட் போல்ட், டெவன் கான்வே, ஆலன், டிம் சவுதி, லாக்கி பெர்குசன், ஹென்றி, டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திர, மிட்சல் சாண்ட்னர் உள்ளிட்ட வீரர்கள் இல்லாத நிலையில், அந்த அணி பாகிஸ்தானை புரட்டி எடுத்து வருகிறது. நியூசிலாந்தின் 2ம் தர அணியிடம் முழு பலம் கொண்ட பாகிஸ்தான் வீழ்ந்து விட்டதாகவும், அதுவும் சொந்த மண்ணில் மோசமான தோல்வியைச் சந்தித்து வருவதாகவும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

New Zealand vs Pakistan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment