Advertisment

'ஹர்திக் பாண்டியாவுக்கு அவ்வளவு முக்கியத்துவம் தேவையில்லை': முன்னாள் இந்திய வீரர் கருத்து

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான், இந்திய கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியாவுக்கு அந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
T20 World Cup 2024 Irfan Pathan  Indian cricket Hardik Pandya priority Tamil News

டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் இடம் இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

T20 World Cup 2024 | Hardik Pandya: 2024 ஆம் ஆண்டுக்கான ஆடவர் டி-20 உலகக் கோப்பை போட்டிகள் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா நாடுகளில் வருகிற ஜூன் 2 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது. இந்த தொடரில் ஜூன் 9 ஆம் தேதி அன்று நியூயார்க்கின் புறநகர் பகுதியில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் அரங்கேறும் லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. 

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: T20 World Cup 2024: Irfan Pathan says ‘Indian cricket should not give Hardik Pandya that much priority as it has’

இந்நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் இடம் இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. ஆல்ரவுண்டர் வீரரான அவர் நடப்பு ஐ.பி.எல் ஒரு வீரராகவும் கேப்டனாகவும் மும்பை அணிக்கு தாக்கத்தை ஏற்படுத்த போராடுகிறார். இது தவிர, அவரது எதிராக மைதானங்களிலும், சமூக வலைதள பக்கங்களிலும்  ரசிகர்கள் முழக்கமிட்டு வருகிறார்கள். இது அவருக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 

இதனிடையே, டி20 உலகக் கோப்பைக்காக எதிர்பார்க்கப்படும் 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியை முன்னாள் வீரர்கள் வெளியிட்டு வருகிறார்கள். அண்மையில் இந்திய அணி பட்டியலை வெளியிட்ட  இந்திய அணியின் முன்னாள் வீரரும், பிரபல வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேகர் தனது பட்டியலில் இருந்து விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரின் பெயர்களை நீக்கி இருந்தார். இது கிரிக்கெட் வட்டாரத்தில் கடும் விவாதத்தை தூண்டியது. 

இர்பான் பதான் கருத்து 

இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான், இந்திய கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியாவுக்கு அந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்று கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸின் பிரஸ் ரூம் ஷோவில் இர்பான் பதான் பேசுகையில், “ஹர்திக் பாண்டியாவைப் பற்றி நான் நினைப்பது என்னவென்றால், இந்திய கிரிக்கெட் அவரது விஷயத்தில் இதனை தெளிவுபடுத்த வேண்டும். இதுவரை அவருக்குக் கொடுத்தது போல் அவருக்கு அதிக முன்னுரிமை கொடுக்கக் கூடாது. ஏனென்றால் நாம் இன்னும் உலகக் கோப்பையை வெல்லவில்லை. 

நீங்கள் ஒரு முதன்மையான ஆல்ரவுண்டர் என்று நினைத்தால், சர்வதேச அளவில் அந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். ஆல்-ரவுண்டர் இடத்தைப் பொருத்தவரை அவர் சர்வதேச அளவில் அந்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை, நாம் திறனைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறோம். ஐ.பி.எல் போட்டிகளுக்கும் சர்வதேச ஆட்டங்களுக்கும் இடையில் நாம் குழப்பமடைகிறோம். இதில் பெரிய வித்தியாசம் இருக்கிறது. 

முதலில், ஹர்திக் முழு ஆண்டு முழுவதும் விளையாட வேண்டும். அவரை மட்டும் தேர்ந்து எடுத்து தேர்வு முடியாது. இதனை இந்திய கிரிக்கெட் நிறுத்த வேண்டும். அவர்கள் தனிநபர்களுக்கு முன்னுரிமை அளிப்பதை நிறுத்தல் வேண்டும். அவ்வாறு செய்தால், நீங்கள் பெரிய போட்டிகளில் வெற்றி பெற மாட்டீர்கள். ஆஸ்திரேலியா பல ஆண்டுகளாக செய்து வருவது என்னவென்றால், அவர்கள் உண்மையில் அணி விளையாட்டை விரும்புகிறார்கள். அனைவரையும் சூப்பர் ஸ்டார் ஆக்குகிறார்கள். ஒருவரை மட்டும் சூப்பர் ஸ்டார் ஆக்குவதில்லை, அணியில் உள்ள அனைவரும் சூப்பர் ஸ்டார்கள். அப்படிச் செய்யாவிட்டால் பெரிய போட்டிகளில் வெற்றி பெற முடியாது. 

உலகக் கோப்பைக்கு வரும்போது நான் மிகவும் பயப்படுவது இதுதான். பாருங்கள், எனது கவலை டி20 உலகக் கோப்பையைப் பற்றியது, டாப்-ஆர்டர் பேட்டிங்கைப் பொருத்தவரை நாம் மிகவும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளோம். மிடில் ஓவர்களிலும் நாம் அழகாக வரிசைப்படுத்தப்பட்டோம். ரவீந்திர ஜடேஜா 7-வது பேட்டர் என்று நாங்கள் நினைத்தால், உங்களுக்கு ஒரு நல்ல பினிஷர் தேவை. சர்வதேச அளவில் ஸ்ட்ரைக் ரேட்டைப் பொறுத்த வரையில் அவரது எண்ணிக்கை பெரிதாக இல்லை. அதனால் எனக்கு அவரது இடமும் அணியின் வேகப்பந்து வீச்சும் கவலையாக உள்ளது. 

ஜஸ்பிரித் பும்ராவைத் தவிர, கடந்த தென் ஆப்பிரிக்கா தொடரில் ஐ.பி.எல்-க்கு முன்பு விளையாடிய ஐ.பி.எல்-லில் விளையாடும் வீரர்களைப் பார்த்தால், அவர்களின் எண்ணிக்கை அவ்வளவு பெரிதாக இல்லை, அர்ஷ்தீப்பாக இருந்தாலும், முகமது சிராஜாக இருந்தாலும் சரி, கடைசியாக விளையாடியவர்கள் யார் என்பது உங்களுக்குத் தெரியும். எனவே இந்த இரண்டு துறைகளும் என்னை மிகவும் கவலையடையச் செய்கின்றன. இந்த துறைகள் மிக மிக முக்கியமானதாக இருக்கும்." என்று அவர் கூறினார். 

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க நம்பிக்கையில் இருக்கும் ஹர்திக் பாண்டியாவுக்கு, 2023 ஆம் ஆண்டு இந்திய மண்ணில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையின் போது கணுக்கால் காயம் ஏற்பட்டது. உலகக் கோப்பையில் வங்கதேசத்திற்கு எதிராக புனேயில் நடந்த 4-வது போட்டியின் போது அவர் காயம் அடைந்தார். அதனால், பிப்ரவரி 2024 வரை சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து அவர் விலகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Hardik Pandya T20 World Cup 2024
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment