Advertisment

RCB vs KKR Highlights: கோலி அதிரடி வீண்; 2-வது வெற்றியை பதிவு செய்த கொல்கத்தா

பெங்களூருவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அணி 2-வது வெற்றியை பதிவு செய்தது.

author-image
WebDesk
New Update
RCB vs KKR Live Score IPL 2024 Match 10 Royal Challengers Bengaluru vs Kolkata Knight Riders scorecard updates Bengaluru  in tamil

ஐ.பி.எல். 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Royal Challengers Bengaluru vs Kolkata Knight Riders IPL 2024 Live Score: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த 22 ஆம் முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று (வெள்ளிக் கிழமை) இரவு 7.30 மணியளவில் அளவில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் 13-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு -  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. 

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: RCB vs KKR Live Score, IPL 2024

இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூர் அணியில், பாக் டூபிளசிஸ் 8 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அடுத்து மேரூன் கிரீன் விராட்கோலியுடன் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் பெங்களூர் அணியின் ஸ்கோர் சீராக உயர்ந்த நிலையில், 82 ரன்களை எட்டியபோது கிரீன் 33 ரன்களில் வெளியேறினார்.

21 பந்துகளை சந்தித்த கிரீன் 4 பவுண்டரி 2 சிக்சருடன் இந்த ரன்னை எடுத்தார். அடுத்து வந்த மேகஸ்வெல் 3 முறை கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பித்தாலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில், 19 பந்துகளில் 3 பவுண்டரி ஒரு சிக்சருடன் 28 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுபுறம் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட்கோலி, அரைசதம் கடந்து அசத்தினார். ஆனால் அடுத்தடுத்து களமிறங்கிய படிதார், அனுஜ் ராவத் ஆகியோர் தலா 3 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இறுதிக்கட்டத்தில் தினேஷ் கார்த்திக் – விராட்கோலி ஜோடி அதிரடியாக விளையாடியதால், பெங்களூர் அணி 180 ரன்களை கடந்தது.

20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. 59 பந்துகளை சந்தித்த விராட்கோலி தலா 4 பவுண்டரி சிக்சருடன் 83 ரன்கள் குவித்தார். இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக், 8 பந்துகளில் 3 சிக்சருடன் 20 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் ரன் அவுட் ஆனார். கொல்கத்தா அணி தரப்பில், ரஸல் ரானா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், நரேன் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 183 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு சுனில் நரைன், பிலிப் சால்ட ஜோடி சிறப்பான தொடக்கம் தந்தது. இவர்கள் இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியதால் கொல்கத்தா அணியின் ஸ்கோர் ஜேட் வேகத்தில் உயர்ந்த நிலையில், 6 ஓவர்களில் 80 ரன்களை கடந்து அசத்தியது.

6.3 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 86-ஆக உயர்ந்தபோது, அரைசதத்தை நெருங்கிய சுனில் நரைன் ஆட்டமிழந்தார். 22 பந்துகளை சந்தித்த அவர் 2 பவுண்டரி 5 சிக்சருடன் 47 ரன்கள் எடுத்தார். அடுத்து களமிறங்கிய வெங்கடேஷ் அய்யர் அதிரடியாக விளையாட, பிலிப் சால்ட் 30 (20 பந்து 2 பவுண்டரி 2 சிக்சர்) ரன்களில் வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், வெங்கடேஷ் அய்யருடன் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் கொல்கத்தா அணி வெற்றியை நோக்கி வலுவாக முன்னேறியது. 15-ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 2 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்துள்ளது. அரை சதம் அடித்த வெங்கடேஷ் அய்யர் (50 ரன்களுடன்) வெளியேறினார். தொடர்ந்து ஸ்ரேயாஸ் அய்யர்- ரிங்கு சிங் விளையாடினர். 16.5 ஓவரில் இலக்கை அடைந்து கொல்கத்தா வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பெங்களூருவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய கொல்கத்தா தொடர்ந்து 2-வது வெற்றியை பதிவு செய்தது. கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் அரைசதம் அடித்தார். தொடர்ந்து 2 வெற்றியை பதிவு செய்த கொல்கத்தா புள்ளிப் பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Royal Challengers Bangalore Kolkata Knight Riders IPL 2024
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment