Advertisment

பி.டெக் மாணவரை சுட்டுக் கொன்ற காதலியின் தந்தை; டெல்லியில் பரபரப்பு

தனது ப்ளாட்டிற்கு வரவழைத்து, தனது மகளின் காதலனை சுட்டுக் கொன்ற தந்தை; பி.டெக் படித்து வரும் மாணவரின் மரணத்தால் டெல்லியில் பரபரப்பு

author-image
WebDesk
New Update
vipul sharma

தனது ப்ளாட்டிற்கு வரவழைத்து, தனது மகளின் காதலனை சுட்டுக் கொன்ற தந்தை; பி.டெக் படித்து வரும் மாணவரின் மரணத்தால் டெல்லியில் பரபரப்பு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Dheeraj Mishra

Advertisment

சனிக்கிழமை அதிகாலையில், மூன்றாம் ஆண்டு பி.டெக் மாணவர் ஒருவர் காஜியாபாத்தின் கிராசிங்ஸ் ரீபப்ளிக்கின் 14 வது மாடியில் உள்ள தனது காதலியின் பிளாட்டுக்கு வரவழைக்கப்பட்டார். சில நிமிடங்களுக்குப் பிறகு, இரவில் நான்கு துப்பாக்கி குண்டுகள் துளைக்கப்பட்டன மற்றும் மாணவர் தரையில் சரிந்தார், அந்த மாணவர் தனது காதலியின் தந்தையால் கொலை செய்யப்பட்டார். கொலையாளி பின்னர் காவல்துறையை தொலைப்பேசியில் அழைத்து தானாகவே சரண் அடைந்தார்.

ஆங்கிலத்தில் படிக்க: B.Tech student shot dead by girlfriend’s father at high-rise in Ghaziabad

பாரமவுண்ட் சிம்பொனி சொசைட்டியில் அதிகாலை 3.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

உயிரிழந்த விபுல் வர்மா (23) அதே சொசைட்டியில் 7வது மாடியில் வசித்து வந்ததாகவும், ஏ.இ.பி.எஸ் கல்லூரியில் படித்து வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். 22 வயதான அவரது காதலி நொய்டாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். பாலியாவைச் சேர்ந்த தம்பதியினர், எட்டு ஆண்டுகளாக ஒருவரையொருவர் அறிந்தவர்கள் என்றும், பெங்களூரு மற்றும் டெல்லியில் ஒன்றாக இருந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

குற்றம் சாட்டப்பட்ட ராஜேஷ் குமார் சிங், தற்போது தெற்கு டெல்லியில் உள்ள தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஓய்வு பெற்ற பி.எஸ்.எஃப் (BSF) ஜவான் ஆவார்.

விசாரணையின் போது, தனது மகள் வேறொரு ஆணுடன் பேசியதற்காக விபுல் வர்மா தனது மகளை துன்புறுத்தியதாக ராஜேஷ்குமார் சிங் போலீசாரிடம் கூறினார்; எனது மகள் சமீபத்தில் வேறொரு ஆணுடன் நட்பாக இருந்தாள், அதன் காரணமாக அவளுக்கு விபுலுடன் சண்டை ஏற்பட்டது. விபுலின் காதலி, பெங்களூருவில் உள்ள தனது உறவினருக்கு போன் செய்து, விஷயத்தை கூறியுள்ளார், அந்த உறவினர் ராஜேஷ் குமார் சிங்கிற்கு தெரியப்படுத்தியுள்ளார். பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர் தனது மகளை தன்னுடன் அழைத்துச் செல்ல அவரது குடியிருப்புக்கு வந்தார்.

ராஜேஷ்குமார் சிங் விடியற்காலை 3 மணியளவில், விபுலையும் இந்த பிரச்சினை பற்றி பேசுவதற்காக அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்தார். இருப்பினும், விபுல் வந்த சில நிமிடங்களில், ராஜேஷ்குமார் சிங் கோபமடைந்து, கைத்துப்பாக்கியை வெளியே எடுப்பதற்கு முன்பு அவரை அறைந்தார் மற்றும் நான்கு முறை துப்பாக்கியால் சுட்டார்.

"குற்றம் சாட்டப்பட்டவர் கோபத்தில் இதைச் செய்ததாகக் கூறினார். அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, விபுல் நான்கு தோட்டாக்களால் தாக்கப்பட்டார். அவரது குடும்ப உறுப்பினர்களின் புகாரின் அடிப்படையில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று காசியாபாத் வேவ் சிட்டி ஏ.சி.பி பூனம் மிஸ்ரா கூறினார்.

இருப்பினும், விபுலுக்குத் தொல்லை கொடுத்தது அந்தப் பெண்தான் என்று இறந்தவரின் குடும்பத்தினர்கள் குற்றம் சாட்டினர்.

அவரது தந்தை பிரிஜேஷ் குமார் வர்மா, “அவர் மிகவும் திறமையான மாணவர்... உறவினர் ஒருவர் போன் செய்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக என்னிடம் கூறினார்... நான் அங்கு சென்றபோது, அவரது உடல் பிணவறையில் இருந்தது. அவர் கொலை செய்யப்பட்டார்... எங்களுக்கு நீதி கிடைக்கும் என்று நீதித்துறை மற்றும் யோகி (ஆதித்யநாத்) அரசு மீது எனக்கு நம்பிக்கை உள்ளது,” என்று கூறினார்.

விபுலின் மாமா வினோத் வர்மா, “நான் அவருடைய தந்தையைப் போல இருந்தேன்… நான்தான் அவரை என் வீட்டில் வளர்த்து அவருக்குக் கற்றுக் கொடுத்தேன். அவர் எங்கள் குடும்பத்தின் பெருமையாக இருந்தார்... அந்த பெண் தினமும் அவனது பிளாட்டுக்கு வந்து அவனுடன் பேசுவாள்... அவள் அவனை திரும்ப திரும்ப அழைப்பாள், விபுல் போனை எடுக்காதபோது, அவள் அவனுடைய சகோதரனை அழைப்பாள். இதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது” என்று குற்றம் சாட்டினார்.

மேலும் “அவர் கொலை செய்யப்பட்ட நாளில், பெண்ணின் உறவினர் அவரை அழைத்து, எமர்ஜென்சி என்று கூறினார், மேலும் அவரது தந்தையைச் சந்திக்க மாடிக்குச் செல்லும்படி கூறினார். அவன் அவளது பிளாட்டுக்குள் நுழைந்தவுடன் கண்மூடித்தனமாக சுட ஆரம்பித்தனர். இது முன்கூட்டியே திட்டமிடப்பட்டது... சதியின் ஒரு பகுதி. எங்கள் மகனைத் திரும்பப் பெற முடியாது, ஆனால் குற்றம் சாட்டப்பட்டவருக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்,” என்று வினோத் வர்மா கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Delhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment